விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு ; 531 பேர் கைது

விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு ; 531 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று (21) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 531 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், 27,035 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 20 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 246 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 113 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 4,204 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )