வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு  மரணதண்டனை விதிப்பு

வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரணதண்டனை விதிப்பு

வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் முன்னெடுத்த பெருமளவிலான போராட்டங்கள் வன்முறையாக மாறி, பலர் உயிரிழந்ததோடு, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

பொது சொத்துக்கள் சேதமடைந்ததுடன், பிரதமர் இல்லத்தையும் எதிர்ப்பாளர்கள் குறிவைத்து தாக்கியிருந்தனர்.

இந்த கலவரத்துக்குப் பிறகு அந்நாட்டின் அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்டு, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். தற்போது அவர் அங்கிருந்தபடியே வெளிநாட்டில் தங்கி வருகிறார்.

இந்நிலையில், வங்காளதேசத்தில் பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சி செய்து வரும் சூழலில், ஹசீனாவுக்கு எதிராக மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த குற்றச்சாட்டுகளை ஷேக் ஹசீனா தொடர்ந்து மறுத்து வந்தார்.

இதற்கிடையில், இன்று (17) சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் முக்கிய தீர்ப்பை வழங்கியது.

இந்நிலையில், ஷேக் ஹசீனா மீதான வழக்கில் இன்று டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது. ஷேக் ஹசீனா குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )