
மின் கட்டண உயர்வு இறுதி முடிவு ஏப்ரல் ஏப்ரல் 1ஆம் திகதி எடுக்கப்படும்
மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் திகதி எடுக்கப்படும்.என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர், உலக சந்தை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை தற்போது உயர்த்த எதிர்பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
அதேவேளை, கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாத நிலவரங்களை முன்னிட்டு, இலங்கை மின்சார சபை 13% உயர்வை பரிந்துரைத்துள்ளது. இதற்கான இறுதி முடிவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏப்ரல் 1ல் அறிவிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், டி.ஜே. ராஜகருணா பேட்டி தெரிவிப்பதாவது, மார்ச் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் வரவிருந்த கச்சா எண்ணெய் கப்பல் வராததால், இம்மாதம் 25ஆம் திகதி வரை மட்டுமே சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும். இதனால் மின்சார உற்பத்திக்குத் தேவையான மண்ணெண்ணெய் மற்றும் நெப்தா பற்றாக்குறை ஏற்படும்.
எதிர்வரும் ஏப்ரல் 12, 13 ஆம் திகதிகளில் எரிபொருள் கப்பல் ஒன்று வரவிருந்தாலும் நெப்தா வராது; அதற்குப் பதிலாக டீசலைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
இதனால் இரவு நேரங்களில் மின்சாரம் டீசலில் இருந்து உற்பத்தி செய்யப்படும். பொதுமக்கள் வீதி விளக்குகள் மற்றும் வீட்டு விளக்குகளை அணைத்து ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் நிலைமையை சமாளிக்க வேண்டியிருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

