
ஹோர்முஸ் நீரிணையை நிர்வகிக்க புதிய அமைப்பை உருவாக்கிய ஈரான்
ஹோர்முஸ் நீரிணை தொடர்பான நடவடிக்கைகளை நிர்வகிக்கும் நோக்கில் புதிய அமைப்பொன்றை உருவாக்கியுள்ளதாக ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ளது.
“Persian Gulf Strait Authority” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய அமைப்பு, ஹோர்முஸ் நீரிணையில் இடம்பெறும் நடவடிக்கைகள் மற்றும் சமீபத்திய முன்னேற்றங்கள் தொடர்பான உடனடி தகவல்களை வெளியிடும் என ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த புதிய அமைப்பு ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களின் போக்குவரத்து மற்றும் அனுமதி நடைமுறைகளை ஒழுங்குபடுத்தும் பணியையும் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தக பாதைகளில் ஒன்றாகக் கருதப்படுவதுடன், உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பகுதி இந்த வழியாகவே இடம்பெறுகிறது.
இந்நிலையில், பிராந்தியத்தில் நீடித்து வரும் பதற்ற சூழ்நிலைக்கு மத்தியில் ஈரான் எடுத்துள்ள இந்த புதிய நடவடிக்கை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது

