உலக சுகாதார மாநாட்டில் இலங்கைக்கு சிறப்பு விருது

உலக சுகாதார மாநாட்டில் இலங்கைக்கு சிறப்பு விருது

தாயிடமிருந்து குழந்தைகளுக்கு எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் நோய் பரவுவதை பொது சுகாதார அச்சுறுத்தலாக இல்லாத அளவுக்கு கட்டுப்படுத்தி தொடர்ந்து வருவதற்காக இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு சிறப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சர்வதேச தரநிலைகள் மற்றும் உலகளாவிய ஆலோசனை வழிகாட்டுதல்களுக்கு இணங்க, தாயிடமிருந்து எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் பரவலை வெற்றிகரமாக குறைத்தமைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த சாதனையின் மூலம், குறித்த நோய்கள் இனி முக்கிய பொதுச் சுகாதார அச்சுறுத்தலாக கருதப்படாத நிலைக்கு இலங்கை வந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது.

இந்த விருது இன்று உலக சுகாதார சபை மாநாட்டின் போது ஜெனிவா நகரில் வழங்கப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )