ஹபுருகலை போதிராஜா குளத்தில் மூழ்கி ஒருவர் பலி

ஹபுருகலை போதிராஜா குளத்தில் மூழ்கி ஒருவர் பலி

செவனகல பகுதியில் இன்று (18) ஹபுருகலை போதிராஜா குளத்தில் மூழ்கி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

செவனகல மஹகம பகுதியைச் சேர்ந்த 42 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மற்றொரு நபருடன் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஒரு குழியில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இச் சம்பவம் குறித்து செவனகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )