களுத்துறையில் மது அருந்திவிட்டு பஸ் செலுத்திய 8 சாரதிகள் மற்றும் ஒரு நடத்துனர் கைது

களுத்துறையில் மது அருந்திவிட்டு பஸ் செலுத்திய 8 சாரதிகள் மற்றும் ஒரு நடத்துனர் கைது

பயணிகள் போக்குவரத்து பஸ் சேவையில் ஈடுபட்டிருந்த போது, போதைப்பொருள் பயன்படுத்தியமை கண்டறியப்பட்ட 08 சாரதிகள் மற்றும் ஒரு நடத்துனர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (19) களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய அதிகாரிகளினால், தேசிய போக்குவரத்து மருத்துவ அதிகாரிகளுடன் இணைந்து இந்த கூட்டு விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, பயணிகள் போக்குவரத்து பஸ்களில் பணிபுரியும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், போதைப்பொருள் பயன்படுத்தி பணியில் ஈடுபட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 35 முதல் 57 வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் பயாகல, யட்டியன, தொடங்கொட, தெபுவன, மீகஹதென்ன மற்றும் களுத்துறை தெற்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )