
ஆரம்பக் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு IDMNC International ஏற்பாட்டில் வெற்றிகரமாக நடைபெற்ற இலவச செயலமர்வு
IDMNC International நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆரம்பக் குழந்தைகள் மற்றும் ஆரம்பப் பள்ளிக் கல்வி தொடர்பான இலவச செயலமர்வு வெற்றிகரமாக நடைபெற்றது.

ஆரம்பக் கல்வித் துறையில் அறிவையும் தொழில்முறை திறன்களையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த செயலமர்வு கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, IDMNC நிறுவனத்தின் செனட் அலுவலக தலைமை மண்டபத்தில் நடைபெற்றது.
IDMNC International நிறுவனத்தின் தலைவர் வி.ஜனகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்வியாளர்கள், ஆசிரியர் தொழிலில் ஈடுபட விரும்புவோர் மற்றும் கல்வி ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது உரையாற்றிய மாலினி முனசிங்க மற்றும் பிரசாத் ஹேரத் ஆகியோர், நவீன கல்வி அணுகுமுறைகள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி தொடர்பான நடைமுறை அம்சங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
மேலும், IDMNC விரிவுரையாளர் நஷீபா கரிஅப்பேர் , “திறன் வாய்ந்த கற்பித்தல் மற்றும் கற்றலுக்கான உளவியல்” என்ற தலைப்பில் விசேட உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் லயனல் பின்டோ, சஜித் லியனகே மற்றும் ரிஸ்கான் மொஹமட் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஆரம்பக் குழந்தைகள் மற்றும் ஆரம்பப் பள்ளிக் கல்வி தொடர்பான இந்த இலவச செயலமர்வு, தரமான கல்வியை ஊக்குவிப்பதிலும் கல்வியாளர்களை தொழில்முறை ரீதியாக வலுப்படுத்துவதிலும் IDMNC International தொடர்ந்து அர்ப்பணிப்புடன் வருவதை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.

