
தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக மீறி அரசாங்கம் மக்களை பொய்களால் ஏமாற்றி விட்டது
நாட்டின் பொருளாதாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் இந்த தருணத்தில், ஆளும் தரப்பில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் எனக்கு வியப்பைத் தருகின்றன.
ரூ.9000 மின்சாரக் கட்டணத்தை ரூ.6000 ஆகவும், ரூ.3000 மின்சாரக் கட்டணத்தை ரூ.2000 ஆகவும், 33% ஆல் குறைப்போம் என தெரிவித்து, 75 இலட்சம் மின்சார பாவனையாளர்களை பாதிப்புக்கு ஆளாக்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் செல்லும் கமிசன் தொகைகளை நீக்கி, வரிகளை நீக்கி, துறைமுகத்தில் இறக்குமதியாகும் அதே விலையில் எரிபொருட்களை மக்களுக்குப் பெற்றுத் தருவோம் என்று இந்த அரசாங்கம் தேர்தல் மேடைகள் எங்கும் உரத்து பிரஸ்தாபித்தது.
இன்று நாட்டின் அனைத்து மக்களும் பொய்யால் ஏமாற்றப்பட்டுள்ளனர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு இன்று உரம் இல்லை என்பதோடு, கிடைக்கும் உரமும் தரமற்றதாகவும் காணப்பட்டு வருகின்றன. இருக்கும் உரங்களும் கருப்புச் சந்தை வழியாக விவசாயிகளுக்கு கிடைத்து வருகின்றன. கடந்த தேர்தல் காலத்தில் நெல் விளைச்சலுக்கு கிலோவுக்கு ரூ.150 உத்தரவாத விலையைப் பெற்றுத் தருவோம் என்று பிரஸ்தாபித்திருந்தனர்.
இன்று உர பிரச்சினைக்கும், யானை-மனித மோதலுக்கும் தீர்வுகள் இல்லாமல் விவசாயிகளை ஆதரவற்றவர்களாக்கியது போலவே மீனவர்களையும் தற்சமயம் ஆதரவற்றவர்களாக்கி விட்டுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (20) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இன்று நாட்டின் தொழிற்சாலைகள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
வாழ்க்கைச் செலவு அதிகரித்து வாழ்க்கைச் சுமை அதிகரித்து காணப்படுகின்றன. ஓய்வூதியர்களுக்கும் சிரேஷ்ட பிரஜைகளுக்கும் அவர்களின் சேமிப்புகள் மீதான 15% வட்டி வருமானங்கள் கூட இன்று பறிக்கப்பட்டுள்ளன.
200 ஆடை தொழிற்சாலைகள் வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட MAS Lanka, Brandix மற்றும் Hirdaramani போன்ற தொழிற்சாலைகள் நாட்டில் மூடப்பட்டு வருகின்றன.
இன்று இந்தத் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, இந்தியாவிலும் வங்களாதேசத்திலும் ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாட்டின் வறுமை மேலும் மேலும் அதிகரித்து வருகின்றன.
நமது நாட்டில் வறுமை 30% முதல் 40% வரையில் அதிகரித்து காணப்படுகின்றன. இந்த வறுமை நிலை தெரிந்தும் அரசாங்கம் வறிய மக்களை புறக்கணித்து நடந்து வருகின்றது. வறுமை ஒழிப்புக்கு அரசாங்கத்திடம் எந்த தெளிவான வேலைத்திட்டமும் இல்லை.
உணவு பாதுகாப்பின்மை, மருந்து தட்டுப்பாடுகள் என்பன நிலவுகின்றன. மருத்துவமனைகளில் உபகரணங்களுக்கு காணப்படும் தட்டுப்பாடுகளால் அறுவைசிகிச்சைகளை செய்துகொள்வதற்கு வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இன்று மக்களுக்கு ஏற்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கல்விச் சீர்திருத்தங்களுக்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கல்வியை ஆபாசமயப்படுத்துவதையே எதிர்த்தோம்.
12 இலட்சத்திற்கு விட்ஸ் ரக காரைப் பெற்றுத் தருவோம் எனக் கூறிய அமைச்சர், கல்வி சீர்திருத்தங்களுக்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு தெரிவித்ததாக குற்றம்சாட்டினார். கல்விச் சீர்திருத்தங்களுக்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கல்வியை ஆபாசமயப்படுத்துவதையே எதிர்த்தோம்.
கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தால், பாடசாலைகளுக்குத் தேவையான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களைக் கூட பெற்றுக் கொடுப்பதற்கோ அல்லது தேவையான பயிற்சிகளையேனும் பெற்றுக் கொடுப்பதற்கு கூட முடியாமல் தானே போயுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
12 இலட்சத்திற்கு விட்ஸ் ரக காரை பெற்றுத் தருவோம் என வாக்குறுதியளித்து ஆட்சியைப் பெற்ற இவர்கள், வாகனங்கள் மீது 50% வரிகளை விதித்து, தமது நெருங்கிய நட்பு வட்டாரங்களுக்கு நன்மைகளைக் கொடுத்துள்ளனர்.
12 இலட்சம் ரூபாவிற்கு விட்ஸ் ரக காரைப் பெற்றுத் தருவோம் என வாக்குறுதி வழங்கி, இந்த அரசாங்கம் பொய்யர்கள், ஏமாற்றுக்காரர்களால் ஆன அரசாங்கம் என்று மக்கள் தற்சமயம் ஏற்றுக்கொண்டுள்ளனர். இன்று வாகனங்களுக்கு 50% வரிகளை விதித்துள்ளனர்.
16 ஆம் திகதி முதல் இந்த வரி நடைமுறைக்கு வருகின்றன. இதற்கு முன்பே இந்த தகவலை அரசாங்கத்திற்கு நெருங்கிய நண்பர்கள் சிலருக்கு அனுப்பி 4000 க்கும் அதிகமான வாகனங்களுக்கு கடன் கடிதங்களைக் கூட அனுப்பி வைத்துள்ளனர். இதனால் பல பில்லியன் நஷ்டம் நாட்டிற்கு ஏற்பட்டுள்ளன.
இவ்வாறான கீழ்தரமான வேலைகளைச் செய்து தன்னலத்திற்காக நாட்டின் 220 இலட்சம் மக்களை பலிகொடுத்துள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாட்டிற்கு ஏற்பட்ட 25 இலட்சம் டொலர் காணாமல் போன பொறுப்பிலிருந்து மத்திய வங்கி விடுவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி ஆளுநர், விசேட சட்டத்தின் காரணமாக சுயாதீன ஒருவராக இருப்பதால், 25 இலட்சம் அமெரிக்க டொலர் சம்பந்தமான விடயத்திற்கு மத்திய வங்கிக்கு பொறுப்புக் கூறாது என கருத்து வெளியிட்டுள்ளார். மத்திய வங்கி ஆளுநர் இதற்கான பொறுப்பை நிதி அமைச்சுக்கு பாரப்படுத்தியுள்எனர்.
இந்த அறிக்கையுடன் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உடன்படுகிறதா என்பதை அறிய விரும்புகிறோம். இந்த பிரச்சினை சம்பந்தமாக மத்திய வங்கிக்கு பொறுப்பு இல்லையா என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி எழுப்பினார்.
அரசாங்கத்தால் சித்தரிக்கப்பட்ட கனவுலக் கதைகளினது உண்மையான யதார்த்தங்கள் நாளுக்கு நாள் வெளிப்பட்டுக் கொண்டு வருகின்றன.
மத்திய வங்கியை சுயாதீனமாக்கும் சட்டத்தை கொண்டுவந்த சமயத்தில் தற்போதைய ஜனாதிபதி அதற்கு எதிராக வாக்களித்தார். இன்றைய அரசாங்கத்தின் ஆட்சிமுறையின் கீழ் இருக்கும் மத்திய வங்கி ஆளுநர் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
நிதி மற்றும் பொருளாதார ரீதியாக நாடு ஆபத்தில் இருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் அறிவிக்கிறார். ஆனபடியால், இது தொடர்பாக அரசாங்கம் விளக்கம் தெரிவிக்க வேண்டும்.
வளமான நாடு, அழகான வாழ்க்கை ஊடாக கற்பனை உலகைக் கட்டமைத்தாலும் அதன் யதார்த்தம் வேறாக காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
முடியுமானால் கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தியுங்கள் பார்க்கலாம்!
முடியுமானால் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் சென்று, மக்கள் மத்தியில் சென்று, அவர்களின் பிரச்சினைகளை முடியமானால் ஆராயுங்கள். அரசாங்கத்தால் மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை இன்று காணப்படுகின்றன.
ஆட்சிக்கு வந்தபோது கூறிய எதையும் இன்று அரசாங்கம் முன்னெடுத்தபாடில்லை. வளமான நாடு, அழகான வாழ்க்கை ஊடாக முன்வைத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கிறோம். இனிமேலேனும் பொய் சொல்வதால் பயனில்லை.
அரசாங்கம் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும்வரை மக்களுக்காக மக்கள் பக்கம் முன் நிற்ப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

