கழிப்பறை குழி வெடித்து நபரொருவர் பலி

கழிப்பறை குழி வெடித்து நபரொருவர் பலி

காலி – பிலான பகுதியில் கழிப்பறை குழி வெடித்ததில் நேற்று (12) ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் வீட்டு கழிப்பறைக் குழியில் கார்பைடைப் பயன்படுத்தி எரிவாயு தயாரிக்க முற்பட்டபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவத்தில் 50 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் காலி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )