
போதைப்பொருட்களுடன் கனேடிய பெண் பிரஜை கைது
கனடாவிலிருந்து தோஹா வழியாக கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் இலங்கை வந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் 18,123 கிராம் ஹாஷிஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் 37 வயதுடைய கனேடிய நாட்டை சேர்ந்தவராவார்.
சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகளை இலங்கை சுங்கத் துறையின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மேற்கொண்டு வருவதாக, சுங்க ஊடகப் பேச்சாளரும் கூடுதல் சுங்க இயக்குநர் ஜெனரலுமான சீவலி அருகோட தெரிவித்துள்ளார்.
CATEGORIES Sri Lanka

