2 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை

2 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை

தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த நிலச்சரிவு எச்சரிக்கைகளை புதுப்பித்துள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (22) காலை 6.00 மணி முதல் நாளை (23) மாலை 6.00 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட மற்றும் இரத்தினபுர மாவட்டத்தின் இரத்தினபுர பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மூன்றாம் நிலை “வெளியேறுங்கள்” என்ற சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மலைச்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், மண் பிளவுகள், மரங்கள் சாய்வு, நீரோட்ட மாற்றங்கள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )