
ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
குருநாகல் – தித்தவெல்ல, அலஸ்வத்த பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (07) இரவு குருநாகல் பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்போது சந்தேகநபரிடமிருந்து 126 கிராம் 500 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் மாஸ்பொத்த பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

