
ஹற்றன் – டிக்ஓயா நகரில் 82 வயதுடைய கணவன் – மனைவி படுகொலை
ஹற்றன், டிக்ஓயா நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் வாழ்ந்து வந்த தம்பதியினர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஹற்றன் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொலைசெய்யப்பட்ட கணவன் 82 வயதுடைய எஸ். காளிமுத்து சத்திவேல் எனவும் கொலைசெய்யப்பட்ட மனைவி 82 வயதுடைய
சகுந்தலாதேவி எனவும் பொலிஸார் தெரிவித்துளள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட தம்பதியினரின் பிள்ளைகள் கொழும்பு பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்த தம்பதியினர் நீண்ட காலமாக குறித்த வர்த்தக நிலையத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
எனினும், தற்போது அந்த வர்த்தக நிலைய செயற்பாடுகளை மூடிவிட்டு, இருவரும் அங்கு தனியாக வாழ்ந்து வந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
யாரேனும் ஒருவர் இந்த வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்து இவர்கள் இருவரையும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டாரா? அல்லது இது குடும்பத் தகராறு காரணமாக இடம்பெற்றதா? என்பது குறித்து ஹற்றன் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

