பொசனை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்

பொசனை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்

பொசன் தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டமொன்றை அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலையை மையமாகக் கொண்டு அமுல்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விசேட போக்குவரத்து திட்டம் நேற்று (08) முதல் அமுலிலுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை ஆகிய இடங்களுக்கு வருபவர்கள் பின்வரும் இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் நிறுவப்பட்டுள்ளன,

மேலும் இந்த இடங்களில் வாகன சாரதிகள் தங்கள் வாகனங்களை நிறுத்துமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  1. ருவன்வெலிசாய வாகன நிறுத்துமிடம்
  2. ருவன்வெலிசாய விஐபி வாகன நிறுத்துமிடம்
  3. மிரிசவெட்டிய வாகன நிறுத்துமிடம்
  4. வட வந்தனா வாகன நிறுத்துமிடம்
  5. இசுறுமுனிய பாடசாலை வாகன நிறுத்துமிடம்
  6. தூபாராமய மயானம் வாகன நிறுத்துமிடம்
  7. சண்டஹிரு சேயா வாகன நிறுத்துமிடம்
  8. பழைய பிக்ஷு வித்யாலா வாகன நிறுத்துமிடம்
  9. அபயகிரிய வாகன நிறுத்துமிடம்
  10. சமாதி புத்தர் சிலை வாகன நிறுத்துமிடம்
  11. ஜெதவனாராம வாகன நிறுத்துமிடம்
  12. நெல்லிக்குளம் பாடசாலை வாகன நிறுத்துமிடம்
  13. புரவித்யா சந்திப்பு வாகன நிறுத்துமிடம்
  14. பழைய சிறைச்சாலை வாகன நிறுத்துமிடம்
  15. குருநாகல் சந்தி வாகன நிறுத்துமிடம்
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )