
அனுமதி இல்லாமல் ட்ரோன்களை இயக்குவதற்கு தடை
நாட்டில் அனுமதி இல்லாமல் ட்ரோன்களை (ஆளில்லா விமானங்கள்) இயக்குவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இதற்காக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முந்தைய காலங்களில், உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் சட்டவிரோதமாக ட்ரோன்களை இயக்கிய நபர்களுக்கு விமானப்படை கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுத்திருந்தது. அதன்படி, இனிமேல் ட்ரோன் இயக்குபவர்கள் தொடர்புடைய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றி, முறையான அனுமதியைப் பெற்ற பின்னரே ட்ரோன்களை இயக்க வேண்டும் என விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்த விழிப்புணர்வு நடவடிக்கையின் நோக்கம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, ட்ரோன் இயக்குபர்கள் தேவையற்ற சட்டச் சிக்கல்கள் மற்றும் சிரமங்களுக்கு உள்ளாவதைத் தவிர்ப்பதாகவும் விமானப்படை குறிப்பிட்டுள்ளது.

