
பெட்ரோல் நிலையங்களில் QR குறியீடு கட்டாயம்
QR குறியீடு தொடர்பாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொண்டு, இன்றிலிருந்து பெட்ரோல் நிலையத்திற்கு வருமாறு பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் மக்களுக்குத் தெரிவிக்கிறது.
சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ, ஊடகங்களிடம் பேசுகையில், இன்றிலிருந்து எந்த அவசர நிலை ஏற்பட்டாலும் கியூஆர் குறியீடு இல்லாமல் எரிபொருள் வழங்கப்படாது என்று கூறினார்.
மேலும் அவர் , “QR குறியீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், 1919 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து, அந்தப் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொண்டு பெட்ரோல் நிலையத்திற்கு வரவும்.
நேற்று QRகுறியீடு இல்லாமல் எரிபொருள் வழங்க சில சலுகைகளை வழங்கினோம். ஆனால் இப்போது QR குறியீட்டுடன் மட்டுமே எரிபொருள் வழங்கப்படுகிறது.” என தெரிவித்துள்ளார்.

