காயத்ரி மந்திரத்தை சரியாக உச்சரிப்பதால் வாழ்வில் நிகழும் அற்புதங்கள்

காயத்ரி மந்திரத்தை சரியாக உச்சரிப்பதால் வாழ்வில் நிகழும் அற்புதங்கள்

“ஓம் பூர்புவஸ்வ: தத்சவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத்”

நம் புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது இதன் சுருக்கமான பொருள்.
காயத்ரி மந்திரம் ரிஷி விஸ்வாமித்திரரால் ஆக்கப்பட்டது .
சூரிய பகவானை நோக்கி வழிபடுவதாக இம் மந்திரம் அமைந்துள்ளது.
மிக அதிக சக்தி கொண்டது.
அதிர்வுகள் மூலம் ஆக்கப்பூர்வ சக்தியினை ஏற்படுத்துவது.
வேதங்களின் தாய் தான் காயத்ரி தேவி.
இம் மந்திரம் சொல்லப்படும் இடங்களில் எல்லாம் காயத்ரி தேவி இருப்பாள்.
காயத்ரி தேவிக்கு சாவித்திரி, சரஸ்வதி என்ற பெயரும் உண்டு.

வேதத்திலிருந்து வந்த அனைத்துக்கும் பொதுவான மந்திரம் காயத்ரி மந்திரம்.

காயத்ரி மந்திர வார்த்தைகளை சரியான முறையில் உச்சரிக்கும் போது காயத்ரி மந்திரத்தின் சக்தியை உணர முடியும். காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் போது, கண்களை மூடிக்கொண்டு,நீங்கள் உச்சரிக்கும் ஒவ்வொரு வாரத்தையின் மீது மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். அதன் பின் அற்புதங்கள் நடக்கும் .

ஒருவர் மனதை ஒருமுகப்படுத்தி மனதை அமைதியச் செய்யும் வகையில் காயத்ரி மந்திரத்தின் சொற்களில் வரும் ஓசை வடிவமைக்கப்பட்டுள்ளது.

காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதால் ஏற்படும் உடல் நல பயன்கள்

மனதை அமைதியாக்கும்
இந்த மந்திரம் ஓம் எனும் சொல்லோடு தொடங்கும். இந்த ஒலியின் விளக்கக் கூற்று உங்கள் உதடு, நாக்கு, மேல் வாய், நாக்கின் பின்புறம் மற்றும் மண்டை ஓட்டின் வழியாக அதிர்வை ஏற்படுத்தும். இது மனதையை மிகவும் சாந்தப்படுத்தும் என்றும் ஹார்மோன்களை அமைதிப்படுத்தும்
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்

னதை ஒருநிலைப்படுத்தி இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது ஏற்படும் அதிர்வுகள் மூளையின் அடிப்பகுதியான ஹைப்போதலாமஸை (நோய் எதிர்ப்பு சக்தி உள்பட உடலில் உள்ள பல செயல்பாடுகளையும் சுரப்பதையும் சீராக வைத்திருக்கும் பொறுப்பை கொண்டுள்ள சுரப்பி) மிகவும் சிறப்பாக செயல்பட வைக்கும்.

இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் ஏற்படும் அதிர்வுகளால், எண்டார்பின்ஸ் மற்றும் இதர அமைதிப்படுத்தும் ஹார்மோன்கள் சுரப்பதற்கும் உதவிடும். இதனால் மன அழுத்தம் வராமல் இருக்கும்.

காயத்ரி மந்திரத்தை அழுத்தமாக உச்சரிக்கும் போது ஆழமாக சுவாசிக்கின்றோம் .இதனால் , உங்கள் சருமத்திற்கு அதிகமாக ஆக்சிஜென் கிடைக்கும். இதனால் உங்கள் சருமம் இளமையுடனும் பொழிவுடனும் காணப்படும்.

இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது, ஒருவர் ஆழமாக சுவாசித்து, சிறிது நேரத்திற்கு மூச்சை அடக்க வேண்டும். இதனால் நுரையீரல் வலுவடையும். அதனால் ஆஸ்துமா பிரச்சினைகளுக்கும் நிவாரணமாக விளங்கும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )