
காலி குமாரி தடம் புரண்டதில் ஜிந்தோட்டை ரயில் பாதை திருத்தப்படும்வரை மாற்று ரயில் குறித்து அறிவிப்பு
ஜின்தொட்ட ரயில் நிலையத்திற்கு அருகில் காலி குமாரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டதில் ரயில் பாதை சேதமடைந்ததையடுத்து ரயில் பாதை திருத்தப்பணிகள் இன்றும் தொடர்கின்றன.
மருதானை ரயில் நிலையத்திலிருந்து பெலியத்த நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் நேற்று பிற்பகல் தடம் புரண்டது.
இதனால் , அம்பலங்கொட ரயில் நிலையம் வரை கடலோரப் பாதையில் ரயில் போக்குவரத்தை ரயில்வே திணைக்களம் மட்டுப்படுத்தியுள்ளது.
ரயில் தடம் புரண்டதால் ரயில் பாதையும் கடுமையாக சேதமடைந்துள்ளது, மேலும் அதன் புனரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை , இன்று காலை இயக்க திட்டமிடப்பட்ட ரயில்கள் ஜின்தொட்ட ரயில் நிலையத்திற்கு அடுத்து அமைந்துள்ள தொடந்துவ, ஹிக்கடுவ, கஹாவ மற்றும் அம்பலங்கொட ரயில் நிலையங்களில் இருந்து ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது.
பெலியத்தவிலிருந்து இயக்க திட்டமிடப்பட்ட ரயில், காலி ரயில் நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
இதனால் குறித்த ரயிலில் பயணிப்பவர்கள் பஸ்கள் மூலம் ஜின்தொட்ட ரயில் நிலையத்திற்கு அடுத்து உள்ள ஒரு ரயில் நிலையத்திற்கு வந்து வேறு ஒரு ரயிலுக்கு மாறிக்கொள்ள முடியும் என ரயில்வே திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது .

