SJBயின் ஆதரவாளர்கள் 33 பேர் கைது

SJBயின் ஆதரவாளர்கள் 33 பேர் கைது

கண்டியில் உள்ள பாதஹேவாஹெட்ட தொகுதியில் ஐக்கிய மக்கற் சக்தி வேட்பாளர்களை ஆதரித்து வாகன பேரணியில் பங்கேற்கத் தயாராக இருந்த 33 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

அம்பிட்டிய பகுதியில் இந்நடவடிக்கைக்காக தயார் நிலையில் வைத்திருந்த 8 வாகனங்களையும் கண்டி தலைமையக பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

வேட்பாளர்களின் உருவப்படங்கள் மற்றும் பல்வேறு கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், தற்போது அவை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )