
தலையில் தேங்காய் விழுந்ததில் 2 வயது சிறுவன் உயிரிழப்பு
தலையில் தேங்காய் விழுந்ததில் இரண்டு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சிலாபம் – வென்னப்புவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சிலாபம்,வென்னப்புவ – பண்டிரிபுவ பகுதியில் நேற்று முன்தினம் தேங்காய் மட்டை வெட்டும் வீட்டொன்றில் பணிபுரியும் பெற்றோருடன் அவர்களது 2 வயது மகனும் சென்றபோதே இந்த சம்பவம் இடமபெற்றுள்ளது.
நொடிப்பொழுதில் தலையில் தேங்காய் விழுந்தபோது மயக்கமடைந்த சிறுவன்,மாரவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற 14காம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மறுநாள் காலை 15ஆம் திகதி சிறுவன் உயிரிழந்துள்ளார்.
ஜீவன் குமார சஸ்மித் என்ற இரண்டு வயது சிறுவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்த சம்பவம் அங்குள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
வறுமை நிலையில் இருக்கும் குடும்பத்தினருக்கு இறுதிச் சடங்குகளை செய்யும் வசதி இல்லாததால், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிறுவனின் உடல் அடக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

