6 ரிக்டர் அளவில் இந்தோனேசியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

6 ரிக்டர் அளவில் இந்தோனேசியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

சுமார் 6 ரிக்டர் அளவில் இந்தோனேசியா சுலவேசி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

இன்று காலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது அச்சமடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்

சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி 6.5 ரிக்டர் அளவில் இந்தோனேசியா, பப்புவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )