மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் பலி

மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் ஆறு கால்மடம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் சங்கரத்தை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய அருண் ஜீவன் பிரசாத் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது

யாழ்ப்பாணம் ஆறுகால் மட பகுதியில் காணப்படும் வாகன திருத்தும் இடத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோதே குறித்த இளைஞரை மின்சாரம் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )