யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு ; 5 பேர் கைது

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு ; 5 பேர் கைது

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் பகுதியில் நேற்று (16) இரவு 5 பேர் கொண்ட குழு ஒன்றினால் ஒருவர் மீது வாள்வெட்டு  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாள்வெட்டு காயத்துக்கு உள்ளான குறித்த இளைஞர் சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )