
கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் நாளை பணிப்புறக்கணிப்பு
மாளிகாவத்தை வைத்தியசாலையில், தகுதியற்ற நபர்களால் நோயாளிகளுக்கு கதிரியக்க பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதை எதிர்த்து, அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் நாளை (28) காலை 8.00 மணி முதல் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இந்த பணிப்புறக்கணிப்பினால் கதிரியக்க பரிசோதனைகள், சிடி (CT) பரிசோதனைகள், எம்.ஆர்.ஐ (MRI) பரிசோதனைகள் மற்றும் மார்பகப் புற்றுநோய்க்கான மமோகிராம் பரிசோதனைகள் பாதிக்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பிற்கு சரியான தீர்வு கிடைக்காத காரணத்தினாலேயே இந்நிகழ்வை முன்னெடுக்க சங்கம் தீர்மானித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

