கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய சிலாபம் வைத்தியசாலையின் சிகிச்சை அறைகள்

கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய சிலாபம் வைத்தியசாலையின் சிகிச்சை அறைகள்

நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் தொடர்ச்சியான கனமழை காரணமாக, சிலாபம் பொது வைத்தியசாலையின் மூன்று சிகிச்சை அறைகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட சிகிச்சை அறைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளர்களை பாதுகாப்பான பிற சிகிச்சை அறைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தினேஷ் கொக்கல தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று இரவு முதல் பெய்து வரும் பலத்த மழையால் புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளில் வீதிகள் வெள்ளநீரால் மூடப்பட்டுள்ளதுடன், சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )