துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட 21 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்

துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட 21 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்

துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் 21 பேர் இன்று (22) காலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கான சில விமானங்கள் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டிருந்தன.

அந்த விமானங்களிலேயே குறித்த சந்தேகநபர்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு வருகை தந்தவர்களில் மஹவத்தே சாமர மற்றும் குடு துமிந்த உள்ளிட்டவர்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மஹவத்தே சாமர மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும், ஏனைய சந்தேகநபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )