நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் இன்று எழுப்பிய கேள்வி

நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் இன்று எழுப்பிய கேள்வி

நாட்டின் ஏற்றுமதி போட்டித்தன்மையை அதிகரிக்கும் எதிர்பார்ப்பில் 2029 ஆம் ஆண்டாகும் போது CESS வரியை முழுமையாக நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்திருந்தாலும், இந்த தீர்மானம் உள்நாட்டு தொழிற்துறை, வேலைவாய்ப்பு, அரச வரி வருவாய் மற்றும் வர்த்தக சமநிலை ஆகியவற்றில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் தொடர்பில் பாரதூரமான கேள்விகளை எழுப்பி நிற்கின்றன.

குறிப்பாக, 2026-2029 க்கு இடையில் வழங்கப்பட்டுள்ள காலக்கெடு உள்நாட்டு தொழிற்றுறை போட்டித்தகு நிலைக்கு கொண்டுவர போதுமானதா என்பது குறித்தும், இறுதியில் இலங்கை “உற்பத்திப் பொருளாதாரத்திலிருந்து இறக்குமதிப் பொருளாதாரத்திற்கு” தள்ளப்படும் அபாயம் காணப்படுகின்றனவா என்பது குறித்தும் நாட்டிற்கு தெளிவான விளக்கம் தேவைப்படுகிறது. ஆகையினால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள கேள்விகளுக்கு குறிப்பிட்ட பதில்களையும் விளக்கங்களையும் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

  1. 2029 ஆம் ஆண்டுக்குள் CESS வரி முழுமையாக நீக்கப்படுவதற்கு முன்னர், உள்நாட்டு தொழிற்றுறைகள் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுடன் போட்டியிடக்கூடிய நிலைக்கு கொண்டுவர 2026-2029 காலகட்டம் போதுமானது என்று நிதி அமைச்சு மேற்கொண்ட பொருளாதார மதிப்பீடு யாது?
  2. CESS நீக்கப்படுவதால் அரசுக்கு இழக்கக்கூடிய வரி வருவாயை ஈடு செய்வதற்கு நிதி அமைச்சு வைத்திருக்கும் குறிப்பிட்ட வருமான வேலைத்திட்டம் யாது? அவ்வாறு அமைந்து காணப்படாவிடின், வரிச்சுமையை மீண்டும் மக்கள் மீது சுமத்த நடவடிக்கை எடுப்பீர்களா?
  3. சிமெந்து, டயர்கள், டைல்கள் போன்ற தொழில்துறைகளுக்கு 2029 வரை வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு காலத்தில் அவற்றை நவீனமயப்படுத்துவதற்கும் போட்டித்தகுமையாக்குவதற்கும் அரசாங்கம் பெற்றுக் கொடுக்கும் நிதிச் சலுகைகள் யாவை?
  4. உள்ள ஆடைத் கைத்தொழில், வீட்டுத் தளபாடம், காலணி, விவசாய உற்பத்தி போன்ற கைத்தொழில்துறைகள் குறைந்த விலை இறக்குமதியில் வீழ்ச்சி காண்பதால் ஏற்படும் வேலை இழப்புகளைத் தடுப்பதற்கு நிதி அமைச்சு எடுக்கும் நடவடிக்கைகள் யாவை?
  5. கடந்த தசாப்தத்தில் ஏற்றுமதி வளர்ச்சி மட்டுப்பட்டிருந்த சூழலில், CESS நீக்கம் மட்டுமே ஏற்றுமதி அதிகரிப்புக்கு காரணமாகும் என்பதற்கு அரசாங்கத்திடம் காணப்படும் பொருளாதார ஆதாரங்கள் யாவை?
  6. CESS நீக்கப்படுவதால் முடிவுறுத்தப்பட்ட பொருட்களின் இறக்குமதி அதிகரித்து, வர்த்தகப் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் அபாயம் குறித்து அரசாங்கம் மேற்கொண்ட தாக்க மதிப்பீடு என்ன?
  7. பல தசாப்தங்களாக CESS பாதுகாப்பின் கீழ் இருந்த தொழில்களை நவீனமயமாக்க முன்னைய அரசாங்கள் தவறிய நிலையில், இன்று அவற்றை வெளிநாட்டு பெரும் தொழில்களுடன் நேரடியாக போட்டியிடும்படி கட்டாயப்படுத்துவது தேசிய கைத்தொழில் முயற்சியாண்மைகளின் “மறுசீரமைப்பா”? அல்லது உள்நாட்டு கைத்தொழில்களின் “முடிவா”?
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )