
”தந்தை கொழும்பில் மீண்டும் குடியேறினார். சுதந்திரமாக இருக்க விரும்புகிறார் . இங்கிருந்து தந்தை எமது அரசியல் பயணத்திற்கு வழிகாட்டியாக இருப்பார்”- நாமல்
”தந்தை மஹிந்த ராஜபக்ஷ கொழும்புக்கு வந்துவிட்டார். அவர் தனியாக வசிக்கிறார் . சுதந்திரமாக இருக்கவே அவருக்கு விருப்பம்.
அவரது விருப்பத்துக்கு இடமளிக்க வேண்டும் .
இந்த அரசாங்கம் செயற்படும் விதத்தை சந்தோசமாக அவதானித்துக்கொண்டிருக்கிறார்.
எம்மை புரிந்து கொண்ட நண்பர் ஒருவர் எமக்கு தனது வீட்டை வழங்கியுள்ளார். சிலரை போல அந்த நண்பர் எமக்கு வீடு கொடுக்க பயப்படவில்லை . இங்கிருந்து தந்தை எமது அரசியல் பயணத்திற்கு வழிகாட்டியாக இருப்பார் ” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் கொழும்பிற்கு இடம்பெயர்ந்தமை தொடர்பில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு நாமல் ராஜபக்ஸ பதிலளித்தார்.
CATEGORIES Sri Lanka

