அவுஸ்திரேலியா விமான விபத்தில் இருவர் உயிரிழப்பு                              தரையிலிருந்த 11 பேர் காயம் – ஒருவர் கவலைக்கிடம்

அவுஸ்திரேலியா விமான விபத்தில் இருவர் உயிரிழப்பு தரையிலிருந்த 11 பேர் காயம் – ஒருவர் கவலைக்கிடம்

தெற்கு அவுஸ்திரேலியாவின் பாராஃபீல்ட் விமான நிலையத்தில் பயிற்சி விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே என்ஜின் கோளாறு காரணமாகக் கீழே விழுந்து, அங்கிருந்த கூடாரத்திற்குள் மோதி தீப்பிடித்தில் விமானி மற்றும் பயணி ஒருவரும் உயிரிழந்தனர்.

மேலும், கூடாரத்திற்குள் இருந்த அல்லது அருகில் இருந்த 11 பேர் காயமடைந்தனர்.

விபத்து நடந்தவுடன் அவசரகால மீட்புக் குழுவினர் விரைந்து செயல்பட்டனர்.
காயமடைந்தவர்களை பல்வேறு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இதில் நான்கு பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர், அவர்களில் ஒருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன .

விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்வதற்காக அந்த வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டது.

அதிகாரிகள் விமானத்தின் தரவுகள் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதன் முதற்கட்ட அறிக்கை வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விபத்து அங்கிருந்த பயிற்சி விமானிகள் மற்றும் ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர்கள் அனைவரும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )