
யாழ்ப்பாணம், உடுவில், மல்வம் பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
யாழ்ப்பாணம், உடுவில், மல்வம் பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குடும்பஸ்தராணா அவர் நேற்று முன்தினம் (25) இரவு மதுபோதையில் வீட்டுக்குச் சென்று மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுட்டுள்ளார்.
பின்னர் வீட்டை விட்டு வெளியேறிய அவர் இரவு முழுவதும் குறித்த நபர் வீடு திரும்பாத நிலையில், நேற்று (26) காலை காணியொன்றிலுள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மது அருந்திக்கொண்டிருந்த வேளை தவறுதலாகக் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி பரிசோதனைகளை மேற்கொண்டதுடன் ,
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

