
துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் முதலாமிடத்துக்கு முன்னேறிய டரைல் மிற்செல்
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் முதலாமிடத்துக்கு நியூசிலாந்தின் டரைல் மிற்செல் முன்னேறியுள்ளார்.
இந்தியாவுக்கெதிரான இரண்டு போட்டிகளில் 268 ஓட்டங்களைப் பெற்ற மிற்செல், இரண்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி முதலாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
- டரைல் மிற்செல், 2. விராட் கோலி, 3. இப்ராஹிம் ஸட்ரான், 4. றோஹித் ஷர்மா, 5. ஷுப்மன் கில், 6. பாபர் அஸாம், 7. ஹரி டெக்டர், 8. ஷாய் ஹோப், 9. சரித் அசலங்க, 10. லோகேஷ் ராகுல்.
CATEGORIES Sports News

