வாகன இறக்குமதிக்கும் கூடுதல் வரி விதிக்கப்படும் என கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை

வாகன இறக்குமதிக்கும் கூடுதல் வரி விதிக்கப்படும் என கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை

நாட்டில் இடையூறு இன்றி வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் எனவும் , க்கள் இது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

வாகன இறக்குமதி நிறுத்தப்படும் என்ற கூற்றுகளில் எந்த உண்மையும் இல்லை என கூறிய ஜனாதிபதி
வாகன இறக்குமதிக்கும் கூடுதல் வரி விதிக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை என்றும், தற்போதுள்ள கொள்கை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும் பொதுமக்களுக்கு உறுதியளிப்பதாகவும் ஜனாதிபதி கூறினார் .

“எதுவும் மாறாது அதனால் இந்த ஆண்டு உங்களால் வாகனம் ஒன்றை வாங்க முடியாவிட்டால், அடுத்த ஆண்டு வாங்கலாம் – ” என ஜனாதிபதி கூறினார்.

சிலர் வேண்டுமென்றே தவறான தகவல்களைப் பரப்பி பொதுமக்களை தவறாக வழிநடத்த முற்படுவதாகவும் அச்ச உணர்வை ஏற்படுத்துவதாகவும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்..

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )