ஆபத்தான முறையில் மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற இரண்டு லொறிகள் கைப்பற்றப்பட்டன

ஆபத்தான முறையில் மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற இரண்டு லொறிகள் கைப்பற்றப்பட்டன

உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாது ஆபத்தான முறையில் மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற இரண்டு லொறிகளை வாதுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

போக்குவரத்து விபத்துகளைக் தவிர்க்கும் நோக்கில் இன்று காலை காலி-கொழும்பு பிரதான வீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது வாதுவ பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் குறித்த லொறியை கைப்பற்றினர்.

இந்த இரண்டு லொறிகளிலும் பெரிய மரக்கட்டைகளை அதிகளவில் அடைத்து வைத்திருந்ததாகவும், மரக்கட்டைகளை கொண்டு செல்லும்போது பயன்படுத்த வேண்டிய அடிப்படை வழிமுறைகளை பின்பற்றவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

லொறிகளின் ஓட்டுநர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )