100 முதல் 150 பில்லியன் வரை வரி ஏய்ப்பு செய்பவர்களின் பட்டியலை இன்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி வெளியிட்டார்

100 முதல் 150 பில்லியன் வரை வரி ஏய்ப்பு செய்பவர்களின் பட்டியலை இன்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி வெளியிட்டார்

பாரியளவில் வரி ஏய்ப்பு செய்யும் 200 பேரின் பட்டியலை ஜனாதிபதி இன்று பாராளுமன்றத்தில் முன்வைத்தார் ,

100 முதல் 150 பில்லியன் வரை வரிகள் செலுத்தப்படாதவர்கள் உள்ளனர் எனவும் ”உங்கள் முகங்கள் எதுவும் இந்தப் பட்டியலில் இல்லை ,”கவலைப்பட வேண்டாம், ” எனவும் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கூறினார்.

உள்நாட்டு இறைவரித்திணைக்களம், சுங்கத் திணைக்களம் மற்றும் கலால் திணைக்களம்இணைந்து வரி ஏய்ப்பு செய்பவர்களை வரி வலைக்குள் கொண்டுவருவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கத் தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் அரச வங்கிகளில் பெற்றுக்கொண்டு திருப்பிச் செலுத்தாத 50 பெரிய கடன்கள் தொடர்பில் நடவடிக்கையெடுக்க சம்பந்தப்பட்டவர்கள் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி அனுர இன்று பாராளுமன்றத்தில் கூறினார்.

ஊழளுக்கு எதிராக செயல்பட வங்கிகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் வெளிநாட்டு இருப்புக்கள் 7 பில்லியன் டொலர்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )