பொது போக்குவரத்தில் ஏற்படும் பிரச்சினைகளை முறையிடும் தொலைபேசி இலக்கம் வட மாகாணத்தில் அறிமுகம்

பொது போக்குவரத்தில் ஏற்படும் பிரச்சினைகளை முறையிடும் தொலைபேசி இலக்கம் வட மாகாணத்தில் அறிமுகம்

பொது போக்குவரத்தில் பொது மக்கள் எதிர்நோக்கும் அசெளகரியங்கள் மற்றும் இடர்பாடுகளை முறையிடுவதற்கான இலக்கம் வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைய, இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன .

0719090900 இலக்கத்திற்கு SMS – மற்றும் Whatsappற்கு குறுந்தகவல் அனுப்புவதன் மூலமும்
021 228 5120 என்ற தொலைபேசி இலக்கதிற்கு அழைப்பதன் மூலமும் பயணிகள் பொது போக்குவரத்தில் ஏற்படும் பிரச்சினைகளை முறையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கரினை பஸ்களில் ஒட்டும் நிகழ்வு மாவட்டச் செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன் தலைமையில் நேற்றைய தினம் காலை 10.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக பிரதம கணக்காளர் எஸ் கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ சுரேந்திரநாதன் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்சினி, ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )