
இன்று நள்ளிரவு முதல் லாஃப்ஸ் எரிவாயு விலையும் 300 ரூபாவால் அதிகரிப்பு
இன்று (11) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாஃப்ஸ் (Laugfs) எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 300 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 4,330 ரூபாயாக இருந்த இதன் புதிய விலை 4,630 ரூபா ஆகும்.
5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 120 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, 1,742 ரூபாயாக இருந்த இதன் புதிய விலை 1,862 ரூபா ஆகும்.
CATEGORIES Sri Lanka

