
வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக டிஜிட்டல் வசதிகளுடனான சாட்சி அறையொன்று கண்டி உயர் நீதி மன்றத்தில் திறப்பு
வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான சேவையை ஒழுங்கு முறையான செயற்பாடாக ஆரம்பித்தல் மற்றும் பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு பாதுகாப்பான சாட்சிகளை வழங்கக்கூடிய டிஜிட்டல் வசதிகளுடனான சாட்சி அறையொன்று கண்டி உயர் நீதிமன்றத்தில் நேற்று (17) திறந்து வைக்கப்பட்டது.
ஏதேனும் சம்பவம் ஒன்று போலிஸாருக்கு உதவி தேவைகளுக்காக அல்லது ஏனைய நிறுவனங்களுக்கு அறிக்கைப்படுத்தப்பட்டதிலிருந்து வன்முறைக்கு முகம் கொடுத்த சிறுவர்களை தொடர்ந்தும் பாதுகாக்கும் பொறிமுறையுடன் சம்பந்தப்படும் வரை விரைவாக மற்றும் சிறுவர் நேய ஒத்துழைப்பை வழங்குவதே இந்த ஒழுங்கு முறையான செயற்பாட்டின் நோக்கமாகும்.

இந்த வசதிகளுடன் பாதிப்பிற்குள்ளான சிறுவர்களுக்கு நீதிமன்ற வளாகத்தில் தனியான அறையிலிருந்து சாட்சி வழங்குவதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.
அதனால் பிள்ளைகளுக்கு குற்றவாளிகளுடன் நேரடியாக நேருக்கு நேர் சந்திக்காதிருப்பதற்கு அந்த பாதுகாப்பு வழங்கப்படுவதுடன், பிள்ளைகள் எதிர்கொள்ளும் அதிர்ச்சிகளும் குறைவாகும்.
பாதிப்பிற்குள்ளான சிறுவர்களுக்கு இந்த சேவை அறிமுகப்படுத்தல், பிள்ளைகளுக்கு எதிரான வன்முறைகளை குறைத்தல் என்பன 2024 பொகோடா மாநாட்டில் இலங்கை வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, யுனிசெப் மற்றும் ஐரோப்பிய சங்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் சட்டத்தை நிலை நாட்டுவதற்கான உதவித் திட்டத்தினால் (JURE) இதற்கான ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக வன்முறைகளினால் பாதிப்பிற்குள்ளான சிறுவர்களுக்கான சேவையை ஒழுங்கு முறைப்படுத்தும் செயற்பாட்டை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு

