
ஹபரண-திருகோணமலை பிரதான வீதியில்காட்டு யானை வேன் மீது மோதியதில் இருவர் வைத்தியசாலையில் யானை உயிரிழப்பு
ஹபரண-திருகோணமலை பிரதான வீதியில் 124 ஆவது கிலோமீட்டர் தூண் அருகே இன்று (27) அதிகாலை 1 மணியளவில் காட்டு யானை ஒன்று வேன் மீது மோதியதில் காயமடைந்த வேனின் ஓட்டுநர் மற்றும் பெண்ணொருவரும் ஹபரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவத்தில் காட்டு யானை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கவுடுல்ல தேசிய பூங்காவிலிருந்து ஹுருலு சுற்றுச்சூழல் பூங்காவிற்கு செல்லும் பிரதான வீதியைக் கடக்கும்போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக கவுடுல்ல வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த காட்டு யானை சுமார் 12 வயதுடையது எனவும் 5 அடி உயரம் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவுடுல்ல வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் ஹதரஸ் கோட்டை பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்கின்றனர்.
CATEGORIES Sri Lanka

