
ஆசிரியர் வெற்றிடங்களுக்காக பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை வர்த்தமானி வெளியிடப்பட்டது
நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக, அரச சேவையில் உள்ள மற்றும் அரச சேவையில் இல்லாத பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அதற்கமைய, அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் ஆசிரியர் சேவைக்கு விண்ணப்பிப்பதற்கான இணையவழி (Online) விண்ணப்பங்கள் ஏற்கும் நடைமுறை நாளை (பெப்ரவரி 05) மு.ப. 09.00 மணிக்கு ஆரம்பமாவதுடன், 2026 பெப்ரவரி 19 ஆம் திகதி பி.ப. 09.00 மணிக்கு நிறைவடையும்.
இதற்கான விண்ணப்ப படிவங்கள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையதளத்தில் “Our Services” என்பதன் கீழ் உள்ள “Online Applications – Recruitment Exams/ E.B. Exams” ஊடாக பதிவேற்றப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை இணையவழி (Online) ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரச சேவையில் இல்லாத பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்காக ஆண், பெண் இருபாலாரிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்த விண்ணப்பங்களும் இணையவழி ஊடாக மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். இதற்கான விண்ணப்பங்கள் ஏற்கும் நடைமுறை பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி மு.ப. 09.00 மணிக்கு ஆரம்பமாவதுடன், மார்ச் மாதம் 05 ஆம் திகதி மு.ப. 09.00 மணிக்கு நிறைவடையும்.

