நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்

நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்று (27) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இராணுவத்தால் அவருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று வெலிவேரிய பகுதியில் குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் ஒருவரிடம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் குறித்து ,
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.

2019 ஆம் ஆண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மாகந்துரே மதுஷ் தொடர்பான விசாரணையின் போது , கைத்துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது . அந்த கைத்துப்பாக்கி இராணுவத்தால் டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது எனவும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஒருவரால் அது மறைத்து வைக்கப்பட்டமையும் இதன்போது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் அமைச்சரின் கைத்துப்பாக்கி வெலிவேரிய பகுதியில் உள்ள ஒரு கால்வாயின் அருகே உள்ள காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

அதன்படி, கைது செய்யப்பட்ட டக்ளஸ் தேவானந்தா இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )