ஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை 10 நாட்களுக்கு ஒத்திவைப்பு

ஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை 10 நாட்களுக்கு ஒத்திவைப்பு

ஈரானின் மின்சக்தி மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த காலக்கெடுவை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேலும்
10 நாட்களுக்கு (ஏப்ரல் 6 ஆம் தேதி வரை) நீட்டித்துள்ளார்.

தனது ‘Truth Social’ தளத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி டிரம்ப், ஈரானுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதால் இந்த அவகாசத்தை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை ஈரான் மீது எச்சரிக்கை விடுத்திருந்த டிரம்ப், ஹோர்முஸ் நீரிணையை 48 மணி நேரத்திற்குள் திறக்காவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், தாக்குதலுக்கான காலக்கெடுவை டிரம்ப் நீட்டிப்பது இது இரண்டாவது முறையாகும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )