
சீரற்ற காலநிலையால் கொட்டா வீதி புனரமைப்புப் பணிகள் ஒத்திவைப்பு
களனிவெலி தொடருந்து மார்க்கத்தின் கொட்டா வீதி தொடருந்து குறுக்கு வீதியில் மேற்கொள்ளப்படவிருந்த புனரமைப்புப் பணிகள், நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த புனரமைப்புப் பணிகள் எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், மோசமான வானிலை காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

