தற்போதைய காலகட்டத்தில் மலையக மக்களின் வாழ்க்கையானது பாதுகாப்பற்றதாக காணப்படுகின்றன

தற்போதைய காலகட்டத்தில் மலையக மக்களின் வாழ்க்கையானது பாதுகாப்பற்றதாக காணப்படுகின்றன

கடந்த காலங்களில், பல தசாப்தங்களாக இந்த மலையக சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் பேசப்பட்டன. ரணசிங்க பிரேமதாச அவர்களினது காலத்திலும், அதற்கு முன்பும் இவர்களுக்கு குடியுரிமை பெற்றுக் கொடுக்கும் பணி நடந்தன.

தற்போதைய அரசாங்கம் மலையக சமூகத்துக்கு தேர்தல் காலத்தில் தனிப்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டன. ஆனால் இந்த தருணத்தில் தோட்டத் துறையில் இந்த சமூகத்தை பாதுகாப்பற்ற நிலைக்கு ஆளாக்கி, உடல் ரீதியான அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நீலகாம தோட்டத்தில் நடந்த தாக்குதலுடன் பார்க்கும் போது மலையக மக்களுக்கு தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பாதுகாப்பு காணப்படுகின்றதா என்பது கேள்விக்குறியாகவே அமைந்து காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மிகச் சாதாரண உரிமையான சுதந்திரமாக வாழ்வதற்கான சந்தர்ப்பம், தாக்குதல்களுக்கு உள்ளாகாமல் வாழும் நிலைகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் இந்த அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது என்பதை கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களிலிருந்து தெளிவாக தெரிகின்றன. டித்வா சூறாவளியினால் மலையக மக்கள் வாழும் பகுதிகளுக்கும் பல சேதங்கள் ஏற்பட்டன.

இப்பகுதிகளில் வாழும் மக்கள் பல துயரங்களுக்கு முகம் கொடுத்தனர். வீடுகளை இழந்து இடைத்தங்கள் முகாம்களிலும் வாழ்ந்தனர். மஸ்கெலியா தோட்டத்தில் 40 குடும்பங்களின் வீடுகள் சேதமடைந்தன. அவர்களுக்கு கிடைக்க வேண்டிய 50, மற்றும் 100 இலட்சம் நிவாரணங்களும் இன்றுவரை கிடைக்கவில்லை.

இப்பகுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் சேதமாகின. இருந்தும் இந்த உட்கட்டமைப்பு வசதிகளைக் கூட செய்து கொடுப்பதற்கும், இதற்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும் இந்த அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற மலையக சமூகம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இப்பகுதி மக்கள் எந்த அளவிற்கு அதிருப்தியடைந்துள்ளனர் என்றால், 2026.01.15 ஆம் திகதி “Pongal for Rights” என்று கூறி வீதிகளுக்கு இறங்கி, லயன் அறைகளுக்குப் பதிலாக சொந்தக் காணியில் வீடு உரிமைகள் கோரி போராட்டம் நடத்தினர்.

2026 மார்ச் மாதம் ஜனாதிபதி ஒருங்கிணைந்த அறிக்கையை வெளியிட்டாலும், இன்னும் 50 இலட்சம் நிவாரணம் கூட மலையகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கவில்லை. தேயிலைத் துறையில் 40% ஆன பங்களிப்பைப் பெற்றுத் தரும் சிறிய தேயிலை தோட்ட உரிமையாளர்கள், தேசிய தேயிலை உற்பத்தியில் அதிக பங்களிப்பை பெற்றுத் தரும் வேளை, அதிக தேயிலைக் காணிகளுக்குச் சொந்தக்காரர்கள் குறைந்த பங்களிப்பையே பெற்றுத் தருகின்றனர்.

பயிரிடப்படாத இந்த காணிகளை மலையக சமூகத்தினருக்குப் பிரித்துக் கொடுத்து, அவர்களை சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்ற வேண்டும். இது ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கல்வி, சுகாதாரத் துறைகளில் பல்வேறு பாரிய பின்னடைவுகள் இந்த மக்கள் வாழும் பிரதேசங்களில் காணப்படுவதால், இந்த துறைகளை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு, தாய்மார்களின் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற சுகாதார பிரச்சினைகளும் இங்கு காணப்படுவதனால், அவற்றைத் தீர்க்க அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுத்து, சமூக நலன்புரி பொறிமுகளைகள் ஊடாக இந்த சமூகத்தை வலுப்படுத்தி, இச்சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டிற்கு பில்லியன் கணக்கான டொலர்களை ஈட்டித் தரும் இந்த மக்களுக்காக, அவர்களின் நலன்புரிக்காக, வெறுமனே அறிக்கைகளை மாத்திரம் வெளியிடாமல், இவர்களுக்கான கடமைகளை உண்மையிலேயே நிறைவேற்றி, இவர்களின் நலனுக்காக இந்த அரசாங்கம் இதயசுத்தியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்குத் தேவையான பூரண ஒத்துழைப்பு நாம் பெற்றுத் தருவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அதேபோல், இன்றைய தினம்(21) மலையக சமூகத்தை வலுப்படுத்தும் முகமாக வி. இராதாகிருஷ்ணன், திகாம்பரம், மனோ கணேசன் ஆகிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த பிரேரணையை வழிமொழிந்து, இதனை நான் மேலும் அங்கீகரிக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )