ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் !

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் !

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சசிகலா ரவிராஜின் வீட்டிற்கு அயல் வீட்டில் உள்ள இலங்கை தமிழரசு கட்சியின் ஆதரவாளரான பெண் ஒருவரினிலாயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என சசிகலா ரவிராஜ் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறித்த பெண் சசிகலாவின் வீட்டின் உள்ளே சென்று வீட்டில் உள்ள அலுமாரியின் கண்ணாடிகளை அடித்து உடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த பெண்ணினால் தான் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)