
சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இருவர் கைது
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்கு கொண்டுவந்த பயணிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவந்த இரண்டு பயணிகளை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைதானவர்கள் கண்டியை வசிப்பிடமாகக் கொண்ட 32 மற்றும் 50 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அவர்களது பயணப் பொதிகளில் 23,000 சிகரெட்டுகள் அடங்கிய 115 அட்டைப்பெட்டி சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்காண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

