மகிந்தவின் உடலை பாதுகாக்க வேண்டும்  – அஜித் ராஜபக்ஷ

மகிந்தவின் உடலை பாதுகாக்க வேண்டும் – அஜித் ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உடல் எதிர்காலச் சந்ததியினருக்காக பாதுகாக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருக்கப்பட வேண்டும் என்று முன்னாள் துணை சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடகியார்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

30 ஆண்டு கால உள் நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்ததற் காக மகிந்த ராஜபக்ஷ நாட்டின் புகழ் பெற்ற தலைவராக மாறினார்

மறைந்த சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் மற்றும் வியட்நாமின் புரட்சிகர தலைவர் ஹோ சி மின் போன்றவர்களின் உடல்கள் பாதுகாக்கப்பட்டதுபோல, மகிந்த ராஜபக்ஷவின்
உடலையும் எதிர்காலச் சந்ததியினரால் மதிக்கப்படும் வகையில் பாதுகாக்க வேண்டும்.

இந் நாடுகளின் தலைவர்கள், எவ்வளவு விலை கொடுத்தாலும், அத்தகைய தலைவர்கள் அவர்களின் மறைவுக்குப்பிறகும் எதிர்காலச் சந்ததியினரால் மதிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்தனர்.

அதுபோன்று, மகிந்த ராஜபக்ஷவின் புகழை நிலைத்து நிறுத்த அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உடல் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என முன்னாள் துணை சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)