பெப்ரவரி 05 முதல் 07 வரை பாராளுமன்ற அமர்வுகள்

பெப்ரவரி 05 முதல் 07 வரை பாராளுமன்ற அமர்வுகள்

பாராளுமன்றம் பெப்ரவரி 05 முதல் 07 ஆம் திகதிகள் வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில்,இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.சபாநாயகர் தலைமையில் கடந்த 23 இல்,இக்கூட்டம் நடந்தது.

இதற்கமைய, பெப்ரவரி 05 புதன்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல், குறிப்பிடப்பட்டுள்ள 01 முதல் 06 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணிவரை பிரதமரிடம் கேட்கப்படும் நான்கு கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான, கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 3.30 மணி வரை அந்நியச் செலவாணி சட்டத்தின் கீழான கட்டளை மற்றும் இறக்குமதி இன்னும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழான ஒழங்குவிதிகள் என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. பி.ப 3.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரையான நேரம்,அரசாங்கத்தினால் பிரேரிக்கப்படவுள்ள ஒத்திவைப்பு விவாதத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)