
மீண்டும் வேகமெடுக்கும் இபோலா வைரஸ் தொற்று!
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் இபோலா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 40 ற்கும் மேற்பட்டோருக்கு இபோலா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தொற்றுறுதியானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே தலைநகர் கம்பாலாவில் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன்மூலம் இந்த ஆண்டு இபோலா தொற்றுக்குப் பலியான முதல் நபர் இவர் ஆவார்.
இதனையடுத்து அங்கு சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.