
இலங்கை கடற்பரப்பை கண்காணிக்க அமெரிக்க விமானம்
நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் நோக்கில், இலங்கையின் கரையோரக் கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக அமெரிக்க அரசாங்கம் பீச்கிராப்ட் கிங் ஏர் விமானத்தை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கவுள்ளது.
இந்து – பசிபிக் மூலோபாயம் குறித்து அமெரிக்க அமைதி நிறுவகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலாளர் டொனால்ட் லூ இதனை அறிவித்துள்ளார்.
இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாக்க உதவுவது அமெரிக்கா உட்பட பிற நாடுகளுக்குத் தேவையாகவுள்ளதாகவும் டொனால்ட் லூ இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
8.7
OVERALL SCORE
Have no any user vote
The rating of each criteria is about my personal opinions about how much they are important than others
CATEGORIES Uncategorized